மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ் 
Regional01

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் 4 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம்முன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் டிபிஎம் மைதீன்கான், ஏஎல்எஸ் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சேரன் மகாதேவி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கவேலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், தென்காசி மாவட்டம் சிவகிரியில் காந்தி கலையரங்கம் அருகில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை தலைமை வகித்தார். தனுஷ் எம்.குமார் எம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில்

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், நகரச் செயலாளர் மணி, குழித் துறை நகரச் செயலாளர் ஆசைதம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT