Regional01

தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் தனது சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தார். நல்லூர் விலக்கு அருகே சென்ற போது, 5,700 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன் வைத்திருந்த பையை தவறவிட்டுள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தொலைந்துபோன செல் போன் எண்ணுக்கு போலீஸார் தொடர்புகொண்டபோது, கீழ கரும்புளியூத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் சாலையில் கிடந்த பையை எடுத்து வைத்திருப்பதாக கூறினார். பரமசிவனின் நேர்மையை பாராட்டி, அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் இருந்த கைப் பையை பெற்றுக்கொண்ட போலீஸார், அதனை சுந்தரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT