முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவப்படத்துக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.(வலது) கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்ற மவுன ஊர்வலம். படம்: என்.ராஜேஷ் 
Regional01

ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப் பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளத் தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட அதிமுக செயலாளர் கணேச ராஜா தலைமையில் அக்கட்சி யினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் மானூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

வள்ளியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்ப துரை தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள், வைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதா படத்துக்கு எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில அமைப்புச் செயலா ளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை ஆகியோர் தலைமையில் சிதம்பரநகர் 4-வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி

SCROLL FOR NEXT