Regional02

தொழில் பயிற்சி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசியதொழிற் பழகுநர் சான்றிதழ்(என்ஏசி) பெறும் வகையில் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் மற்றும் திறன் பயிற்சி ஏதும்பெறாத 8, 10, 12 மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், மத்திய,மாநில அரசு பொதுத்துறைமற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவிண்ணப்பித்து, பயிற்சி பெற ஏதுவாக மத்திய அரசின் திறன்அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால்https://apprenticeshipindia.org என்ற புதிய இணையதளம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற் பழகுநர் பயிற்சிபெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவுசெய்து, தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெறவிண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலத்தில் மாதந் தோறும் ரூ. 7,700-முதல் உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும்.

SCROLL FOR NEXT