Regional03

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு மிளகாய், மல்லிக்கு ஜன.30 கடைசிநாள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான மிளகாய் 30 குறு வட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறு வட்டங்களிலும், வெங்காயம் 21 குறு வட்டங்களிலும், வாழைப் பயிர் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறு வட்டத்திலும் பயிர் காப்பீடு செய்துபயன் அடைய நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களைகாக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் 2020 -2021-ன் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்கூட்டுறவு சங்கங்கள், பொது சேவைமையங்கள் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பப்படிவம், உறுதி மொழிப்படிவம், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட 10-க்கு 1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார்அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

மிளகாய் பயிருக்கு 30.01.2021-ம்தேதிக்குள் ஏக்கருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.1,089-ம், வாழை பயிருக்கு 01.03.2021-ம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.3,115-ம், கொத்தமல்லி பயிருக்கு 30.01.2021-ம் தேதிக்குள் ஏக்கருக்கு 400-ம், வெங்காயம் பயிருக்கு 15.02.2021-ம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.945-ம், வெண்டை பயிருக்கு 15.02.2021-ம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.798-ம் செலுத்தி காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம்.

இயற்கை இடர்பாடுகள் நிகழுமானால் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே,காலம் தாழ்த்தாமல் உடனடியாகபயிர்காப்பீடு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT