தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்தோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021-ம் கல்வியாண்டில் ஒன்றுமுதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிபடிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளிட்டவை) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்கல்விமற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும்வருவாய்அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளம் www.scholarship.gov.in-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைய சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உரிய காலத்துக்குள் (31.12.2020) விண்ணப்பித்து பயனடையலாம் .