தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின்விருப்பநிதியில் இருந்து வல்லநாடுபார்வதி அம்மன் கோயில்தெருவைச் சேர்ந்த சரவணன்மற்றும் திம்மராஜபுரம் மாற்றுத்திறனாளிகள் காலனியை சேர்ந்த இளங்குமரன் ஆகியோருக்கு தலா ரூ.35,000 மதிப்பில் கறவை மாடுகளும், அவற்றுக்கு ரூ.1,105 மதிப்பில் காப்பீடும் செய்யப்பட்டு வழங்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது புரெவி புயல் காரணமாக, பொதுமக்கள் யாரும் தேவை யில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசுஅறிவுறுத்தியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மண்டல இணை இயக்குநர் சம்பத் தலைமையில் அத்துறையினர் சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளி களின் வீடுகளுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புல், தாது உப்புக்கலவை, தாது உப்புக்கட்டி ஆகியவற்றை வழங்கினர்.
இதில், உதவி இயக்குநர்கள் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.