Regional02

‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புகார் அளிக்கலாம்’

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளிலுள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், உணவகங்களில் கடந்த 3-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காலாவதியான முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட பட்டாணி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

அலங்கியம் சாலை ராம் நகர் பகுதியிலுள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, மாவட்டத்தில் எந்த பகுதியிலும் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, உணவில் கலப்படம் குறித்து 9444042322 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT