Regional02

பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

செய்திப்பிரிவு

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள் ளது, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் நகரம். சமீப நாட்களாக பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "அதிகரித்து வரும்போக்குவரத்து நெரிசலால் காலை, மாலை நேரங்களில் சார்பதிவாளர் அலுவலக சந்திப்பு தொடங்கி, கொச்சின் சாலை பிரிவு வரை நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சுபமுகூர்த்த நாட்களில் நெரிசல் மேலும் கடுமையாகிறது. இதைத் தவிர்க்க, பேருந்துநிலையம் அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும்.கனரக வாகனங்கள் செல்ல சுற்றுச்சாலை அமைப்பது குறித்து போலீஸார் திட்டமிட வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT