கடலூர் மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த இருந நாட்களாக விடிய, விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன.
‘நிவர்’ புயலால் கடந்த வாரத் தில் கடலூர் மாவட்டத்தில் கனமழைபெய்தது. அதைத் தொடர்ந்து வந்த ‘புரெவி’ புயலும் இம்மாவட்டத்திற்கு கடும் மழைப் பொழிவை தந்திருக் கிறது.
60 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு
குள்ளஞ்சாவடி -ஆலப்பாக்கம் சாலையில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்ட மழையளவு விவரம்
சிதம்பரத்தில் 340 மி.மீ, கொத்தவாச்சேரியில் 335 மி.மீ, அண்ணாமலைநகரில் 329.4மி.மீ, லால்பேட்டையில் 295.5மி.மீ,பரங்கிப்பேட்டையில் 264.2மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 253.4மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 249மி.மீ, புவனகிரியில் 189மி.மீ, முஷ்ணத்தில் 152.2மி.மீ, விருத்தாசலத்தில் 151 மி.மீ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 145.8மி.மீ,பண்ருட்டியில் 132மி.மீ, வேப்பூரில் 94மி.மீ, லக்கூரில் 68மி.மீ மழை பெய்தது. தொடர்ந்து அவர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியை பார்வையிட்டார். குறிஞ்சிப் பாடியில் சாலையில் வழிந்தோடிய மழை தண்ணீரை ஜேசிபிமூலம் அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வடலூர் அருகே ஆண்டிக் குப்பத்தில் தேங்கி நின்ற மழை நீரையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் மேல்பரவனாற்று பகுதியை பார்வையிட்டார்.
தொடந்து வீராணம் ஏரிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
441 பாதுகாப்பு மையங்கள்
பொதுப்பணித் துறையின் மூலம் அனைத்து நீர்நிலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 441 பாதுகாப்பு மையங்கள் உள் ளன. அதிக மழை காரணமாக குடிசை வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும். 300 ஜேசிபி இயந்திரங்கள் தற்போது மழைநீர் வெளியேற்றப்படும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரண மாக கீழணையில் இருந்து கொள் ளிடத்தில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.