Regional01

குடிநீர் பிரச்சினை இருக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

மதுரையில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இனி மதுரையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. அதிமுக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதிலும், தடையில்லா மின்சாரம் வழங்குவதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதிலும், குடிநீர் வழங்குவதிலும் பற்றாக் குறை இல்லாமல் முதல்வர் பழனிசாமி பார்த்துக் கொள்கிறார்.

நீர் மேலாண்மையில் தலை சிறந்த மாநிலம் என தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. சிறந்த நிர்வாகத்திலும் அதிமுக அரசு வலிமையோடு இருக்கிறது என்று அமித்ஷா கூறினார்.

மதுரைக்குத் திட்டங்களை வாரிக்கொடுக்கும் முதல்வருக்கு, மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று அதை அவரிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT