Regional01

மார்க்சிஸ்ட் எம்.பி. பங்கேற்பு

செய்திப்பிரிவு

பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி அடிக் கல் நாட்டி வைத்துப் பேசினார்.

இவ்விழாவில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பேசும் போது எம்.பி.யின் பெயரைக் குறிப்பிட்டு வரவேற்றனர்.

முதல்வர், துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள் மட்டுமே பேசினர். வெங்கடேசன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட யாருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

எம்.பி. மேடையில் இருக்கும் போதே விழாவில் பேசிய முதல்வர் உட்பட அனைவரும், அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க் கட்சிகள் தவறாகக் குற்றம் சாட்டுவதாகக் கூறினர்.

இக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ.க்கள் பி.மூர்த்தி, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

SCROLL FOR NEXT