Regional02

வீடுகளில் 23 பவுன் திருட்டு

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் பூட்டிய வீட்டில் 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவியூர் கருப்பசாமி நகரைச் சேர்ந்த விவசாயி சூரியன்(48). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குரண்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விளைபொருட்களை பாதுகாப்பதற்காக தனது மனைவியுடன் சென்றுள்ளார். நேற்று வீடு திரும்பிய சூரியன், மின் பெட்டியில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து சென்றபோது, பீரோவில் இருந்த 16 பவுன் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆவியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்

SCROLL FOR NEXT