புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு வாபஸ்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின் றனர். இவர்களுக்கு ஆதரவாக மதுரையில் கம்யூனிஸ்ட் உள் ளிட்ட இடது சாரி அமைப்பினர் ரயில் மறியல் செய்யத் திட்ட மிட்டனர்.
இதற்காக மார்க்சிஸ்ட் கட்சி யினர் பெரியார் பேருந்து நிலையம் அருகே நேற்று காலை கூடினர். மறியல் போராட்டத்தை சு.வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அவர்கள் ஏர் கலப்பைகளுடன் ஊர்வலமாகச் சென்று ரயில் நிலையத்தில் நுழைய முயன் றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் ரயில் நிலையம் முன் மறியல் செய்தனர். தொடர்ந்து மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சரவணன் உட்பட 250-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.