Regional01

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபடு வோரை கைது செய்ய தனிப் படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனிப்படையினர் நேற்று முன் தினம் காவிரி பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பட்டினங்குறிச்சி இந்திராநகரைச் சேர்ந்த மலர்மன்னன் (58) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், ரூ.7 லட்சம் மதிப்புள்ள 10 இரு சக்கர வாக னங்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT