Regional02

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியார் செங்காந்தள் விதை சேமிப்பு நிலைய அலுவலகம் உள்ளது. இந்நிறுவனத்தினர் கரூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,036 விவசாயிகளிடமிருந்து கடந்தாண்டு 258 டன் செங்காந்தள் விதைகளை வாங்கி இருப்பு வைத்திருந்துள்ளனர். ஆனால், இதற்கான தொகையை வழங்காமல் விவசாயிகளை அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனியார் செங்காந்தள் விதை சேமிப்பு நிலைய அலுவலக நுழைவு வாயில் முன் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். டிச.9-ம் தேதி முதல் விவ சாயிகளுக்கு தொகை வழங்கப் படும் என அந்நிறுவனத்தினர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT