தூத்துக்குடி தொகுதி திமுகஎம்எல்ஏ பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில், சென்னை பகல்நேர இணைப்பு ரயில் ஆகியவற்றின் சேவையை நிறுத்துவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, மத்திய ரயில்வேஅமைச்சரை தொடர்பு கொண்டுபேசினார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு பயன் அளித்து வந்த இந்த ரயில் சேவையை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.