Regional03

மாவட்ட அளவில் நாளை தூத்துக்குடியில் செஸ் போட்டி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் டி. நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி நாளை (டிச.6) காமராஜ் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். போட்டிகள் பொதுப்பிரிவாக நடைபெறும். பின்னர் 9, 11, 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பரிசுகள் வழங்கப்படும். இவர்கள் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் www.easypaychess.com என்ற இணையதள முகவரி வழியாக நுழைவுக் கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்துகொள்ளலாம். காலை 9.30 மணிக்கு முதல்சுற்று போட்டிகள் ஆரம்பமாகும். செல்போன் மற்றும் கைக்கடிகாரம் அரங்கத்தினுள் கொண்டு வர அனுமதி இல்லை.

பரிசளிப்பு விழா மாலை 6 மணிக்கு நடைபெறும். போட்டியில் பங்கேற்பவர்கள்மற்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்கள் 94877 03266, 90439 85530, 90936 14942-ல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9, 11, 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பரிசுகள் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT