Regional02

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஆரணி அருகே ஏரி கால்வாயில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந் தார்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் ஊராட்சி அகஸ்தியம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜசேகர். இவரது மகன் சென்னாகிருஷ்ணன்(7). இவர், அதே பகுதியில் உள்ள ஏரி கால்வாயில் நேற்று முன்தினம் மாலை விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, தண்ணீரில் தவறி விழுந்துள்ளார்.

இதையறிந்த அவரது பெற் றோர் கொடுத்த தகவலின் பேரில், ஆரணி தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 4 மணி நேர போராட்டத் துக்கு பிறகு, உயிரிழந்த நிலை யில் சிறுவனை மீட்டனர்.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT