Regional02

பெண்களுக்கு துன்புறுத்தல் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர் அன்னபூரணி நகரில் பெண் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து இளைஞர்கள் சிலர் கொடுமை செய்து வருவதாக வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆய்வாளர் அனுராதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில், 25 மற்றும் 23 வயதுள்ள இரு பெண்களை புதுச்சேரி தர்மாபுரி காமராஜர் வீதியை சேர்ந்த எஸ்.கலையரசன் (20), வில்லியனூரை சேர்ந்த எம்.பசுபதி (20), ஜெ.ஜெகன் (22) ஆகியோர் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து கொடுமை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரிந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், பெண்களை மீட்டு காப்பகத்தில்ஒப்படைத்தனர். இதுதொடர்பாக இளமாறன் என்பவரை தேடி வருகின்றனர் .

SCROLL FOR NEXT