Regional01

மதுரை மக்களின் கால் நூற்றாண்டு கனவான ரூ.1,295 கோடியில் பெரியாறு குடிநீர் திட்டம் முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

செய்திப்பிரிவு

மதுரை மக்களின் கால் நூற்றாண்டு கனவுத் திட்டமான ரூ.1,295 கோடி முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

மதுரை நகரின் குடிநீர் ஆதா ரமாக வைகை அணையே உள்ளது. கோடை காலத்தில் வைகை அணை நீர்மட்டம் வெகு வாக குறைந்து விடுவதால் மது ரைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற் படுகிறது.

இந்நிலையில் மதுரையின் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தீர்க்க ரூ.1,295 கோடியில் முல் லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் மாதம் மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.தற்போது இந்தத் திட்டம் டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முதல் வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் நடைமுறைக்கு வந் தால் மதுரையில் 24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் வழங்க முடி யும்.

மேலும் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட மொத்தம் ரூ.60 கோடி மதிப்புள்ள முடிவுற்ற கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார்.

SCROLL FOR NEXT