Regional01

மதுரை வந்த முதல்வருக்கு அதிமுகவினர் வழிநெடுக வரவேற்பு

செய்திப்பிரிவு

ஈரோட்டில் இருந்து கார் மூலம் மதுரை வந்த முதல்வர் கே.பழனி சாமிக்கு வழி நெடுகிலும் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையில் புதிதாக கட்டப் பட்டுள்ள ஆட்சியர் அலுவலகம் திறப்பு, பெரியாறு கூட்டுக் குடி நீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை ஈரோட்டில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, கார் மூலம் கரூர், திண்டுக்கல் வழி யாக இரவு மதுரை வந்தார்.

முன்னதாக அவரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவு சாலையில் உற்சாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் முதல்வருக்கு பூங் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள டிவிஎஸ் விருந்தினர் மாளிகையில் முதல்வர் நேற்று இரவு தங்கினார்.

மதுரை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு இன்று காலை 10 மணிக்கு மேல் முதல்வர் பழனிசாமி சிவகங்கை செல்கிறார். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் கரோ னா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் விவசாயிகள், சுய உதவிக் குழுவினருக்கான கூட் டத்திலும் பங்கேற்கிறார்.

பின்னர் மதுரை திரும்பும் முதல்வர் மாலை 6.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வரின் வரு கைையயொட்டி மதுரை மாவட்ட எல்லையான பாண்டியரா ஜபுரத்திலிருந்து நகர் எல்லை வரை புறநகர் போலீஸாரும், பரவையில் இருந்து தல்லாகுளம் வரை நகர் போலீஸாரும் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மதுரை, சிவகங்கையில் தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில் பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT