சேலம் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் மின்னணு நிறுவன பொறியாளர்கள். 
Regional03

சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்கிற விவரத்தை அறியக்கூடிய விவிபேட் ஆகியவற்றில் முதல்நிலை சரிபார்க்கும் பணி சேலம் மாவட்டத்தில் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது, 4,424 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4,427 கட்டுப்பாட்டு கருவிகள், 4,750 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்கான இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கியது.

இப்பணியில் பாரத் மின்னணு நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, பாதுகாப்பு அறை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், வட்டாட்சியர் (தேர்தல்) மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT