தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நாளை (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. காலை 9 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்டஅதிமுக சார்பில் எனது தலைமையில் கட்சி அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7-வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில்ஜெயலலிதா திருவுருவப்படத்தை அலங்கரித்து, அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரி வித்துள்ளார்.