அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையத்தில் மறைந்த தனது தாய்மாமா கருப்பகவுண்டர் படத்திற்கு முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
Regional01

தாய்மாமா மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தனது தாய்மாமா மறைவிற்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையம் பொய்யேரிகரையைச் சேர்ந்தவர் கேபிஎஸ் ராஜா. அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர். இவரது தகப்பனார் கருப்பகவுண்டர் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின், உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

இந்நிலையில், தனது தாய்மாமா கருப்பகவுண்டர் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று அந்தியூர் வந்தார். அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் பழனிசாமி, கேபிஎஸ் ராஜா குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT