Regional02

கரோனா கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாமல் விருதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்த பெண்கள்

செய்திப்பிரிவு

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் எதிரே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமைகளில் மட்டும் தடுப்பூசிகள் போடப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று தடுப்பூசி போடுவதற்காக கர்ப்பிணிகளும், குழந்தைகளுடன் தாய்மார்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும், மற்ற சிகிச்சைகளுக்காக நோயாளிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இதனால் நெரிசல் ஏற்பட்டது. போதிய இட வசதி இல்லாததால் கர்ப்பிணிகளும் குழந்தைகளுடன் வந்த தாய்மார்களும் ஒருமணி நேரம் வரை காத்திருந்து தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுகாதாரத் துறை சார்ந்த மருத்துவமனையிலேயே, சமூக இடைவெளி பின்பற்றப்படாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT