Regional02

மீட்பு பணிகளில் வீரர்கள் கவனமாக ஈடுபட வேண்டும் தீயணைப்புத்துறை இயக்குநர் ஜாபர்சேட் அறிவுரைபுரெவி புயலையொட்டி மதுரையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்புத் துறை மீட்பு உபகரணங்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

செய்திப்பிரிவு

மதுரை உட்பட தென்மாவட்டங் களில் புரெவி புயலை எதிர்கொள்ள தீயணைப்புத் துறையினருக்கு தேவையான உபகரணங்கள் குறித்து தீயணைப்பு, மீட்புத்துறை இயக்குநர் ஜாபர்சேட் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் பேரிடர் மீட்பு உபகரணங்களை ஜாபர்சேட் ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: புரெவி புயல் தடுப்பு நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் கவனமாக ஈடுபட வேண்டும். மக்களைப் பாதுகாப்பதோடு சக வீரர்களையும் பாதுகாப்புடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக மதுரையில் தீபாவளியன்று ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக அளவில் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் திரட்டிய தலா ரூ.50 லட்சத்துக்கான வங்கிப் பத்திரங்களை இயக்குநர் ஜாபர்சேட் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

மதுரை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் சரவணக்குமார், மத்திய மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மதுரை மாவட்டத் தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT