Regional02

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ராஜபாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் பழைய பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

கடுமையான உடல் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவித் தொகையை மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சாதாரண உடல் பாதிப்புள் ளவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ராஜபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட 58 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்திய 187 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் கோட்டாட்சியர் அலுவ லகம் முன் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.முத்து காந்தாரி தலைமையில் மறியல் நடந்தது. 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் இன்னாசிராஜா தலைமை யிலும், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT