உதவித்தொகையை அதிகரிப் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் பணி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 120 பேரை கைது செய்தனர்.
அந்தியூரில் மறியல்
கிருஷ்ணகிரியில் கைது
மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெரியசாமி, மாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஊத்தங்கரையில், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.