Regional01

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அருகே கல்லத்தூர் ஊராட்சியில் உள்ள 4 வார்டுகளைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான ஆழ்துளைக் கிணறு பழுதடைந்துவிட்டது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக் கள் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரவி ஆகியோர் சமாதானம் செய்து, கலைந்துபோகச் செய்தனர்.

SCROLL FOR NEXT