Regional01

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் நல அலுவலகத்துக்கு செல்ல வசதியாக பேட்டரி கார் இயக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு மனுக்கள் அளிக்கவும், பிற நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்துகொள்ளவும், விண்ணப்பங்கள் அளிக்கவும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திற னாளிகள் வந்து செல்கின்றனர்.

பேருந்துகளில் வரும் மாற்றுத் திறனாளிகள் பேருந்திலிருந்து இறங்கி நீதிமன்றம் வழியாகச் சென்றால் 500 மீட்டர் தொலைவும், சார்பதிவாளர் அலுவலகம் வழியாகச் சென்றால் ஏறத்தாழ 750 மீட்டர் தொலைவும் நடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பல நேரங்களில் மாற்றுத் திறனாளிகளை, உதவிக்கு வரும் பெற் றோர் அல்லது உறவினர்கள் தூக்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கச் செயலாளர் பி.மாரிக்கண்ணன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு மாற்றுத் திறனாளிகள் பல்வேறு பணிகளுக்காக வந்துசெல்ல வேண்டியுள்ளது. ஆனால், பாதை சரியாக இல்லை. மேலும், பிரதான சாலையிலிருந்து அலுவலகத்துக்கு வந்துசெல்வதில் பெரும் சிரமம் உள்ளது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். அப்போது, மாவட்ட நலப்பணி நிதிக் குழுவிலிருந்து ஒரு பேட்டரி கார் வாங்கி, அதை மாற்றுத் திறனாளிகளுக்காக இயக்கலாம் என தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.உலக மாற்றுத் திறனாளி கள் தினத்தில் இருந்தாவது இந்த வசதியை ஏற்படுத்தித் தர ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

மேலும் அனைத்து அலுவலகங் கள், வணிக வளாகங்கள் ஆகிய வற்றில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்துசெல்வதற்கு ஏதுவாக சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT