Regional01

நபார்டு வங்கி திட்ட அறிக்கை வெளியீடு தென்காசியில் ரூ.4,157 கோடி கடன் வழங்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

நபார்டு வங்கியின் 2021-22ம் ஆண்டுக்கு தென்காசி மாவட்டத்துக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் சமீரன் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டில் பண்ணை கடன்களுக்கு ரூ.2852.75 கோடி, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு முதலீட்டு கடனாக ரூ.281.99 கோடி, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.307.40 கோடி, இதர முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.275.32 கோடி என, வளம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 4,157.49 கோடி கடன் வழங்க வாய்ப்பு உள்ளதாக திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயத் துக்கும் அதைச் சார்ந்த தொழில் களுக்கும் சாத்தியம் உள்ள அளவுக்கு கடன் வழங்க வேண்டும். கல்விக் கடன் மற்றும் சுயஉதவிக் கடன்கள் அதிகமாக வழங்க வேண்டும்” என்றார்.

நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சலீமா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பசுபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வரதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT