திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஆணையர் பேசிய தாவது: புயலால் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தால், அதை அறுத்து அப்புறப்படுத்த 12 இயந்திரங்கள் மற்றும் 16 நீர் இறைக்கும் பம்ப் செட்கள், இதர தளவாட சாமான்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 30 பணியாளர்களை கொண்ட அதிவிரைவு மீட்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது. தாமிரபரணி ஆற்றங்கரை யோரத் தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏதுவாக சிந்துபூந்துறையில் உள்ள பள்ளிக்கூடம், கைலாசபுரம் தைக்கா பள்ளி, கணேசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கொக்கிரகுளம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வண்ணார்பேட்டை சாலைத் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சி.என்.கிராமம் மாநகராட்சி அண்ணா தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தண் ணீரில் நனையாமல் வைப்பதற்கு கண்ணாடி இழையிலான எமர்ஜென்ஸி பவுச்சுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புயல், வெள்ள பாதிப்பு உதவிக்கு மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தை இலவச தொலைபேசி எண் 1800 425 4656-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.