வேலூர் மாவட்டத்தில் முதுகலை அறிவியல் கல்லூரி வகுப்புகள் நேற்று தொடங்கின. 8 மாதங் களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத் துடன் கல்லூரிகளுக்கு வந்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சில கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. ஆனால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், டிசம்பர் மாதத் துக்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரி வகுப்புகள் டிசம்பர் 2-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், வேலூர் மண்டல கல்வியியல் கல்லூரியின் கட்டுப்பாட்டில் உள்ள 149 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 100 கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளன. கரோனா ஊரடங்கு தளர்வு காரண மாக நேற்று முதல் முதுகலை வகுப்புகள் தொடங்கப்பட்டன.
வேலூர் ஓட்டேரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டிகேஎம் மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி, காட்பாடி ஆக்சிலீயம் மகளிர் கல்லூரிகளில் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, மாணவ, மாணவிகள் நேற்று உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்தனர்.
அனைத்து மாணவ, மாணவி களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்னரே கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்கப் பட்டனர். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒவ்வொரு கல்லூரி வகுப்பறை களுக்கு வெளியே மாணவர்கள்கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டி ருந்தது. மேலும், மாணவர்கள் முகக் கவசத்தோடு வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதுநிலை பாட வகுப்புகளில் குறைந்த அளவு மாண வர்களே உள்ளதால் ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள் என சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். பேராசிரி யர்கள் முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு சென்று பாடம் நடத்தினார்கள்.