Regional02

மளிகைக் கடையில் பணம் திருட்டு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மளிகைக் கடை வைத்திருப்பவர் வனராஜ். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து, கடையை பூட்டிச் சென்றுள்ளார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது, பணப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், உண்டியல் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவிநாசி பாளையம் போலீஸார் விசாரிக் கின்றனர்.

SCROLL FOR NEXT