Regional02

திருவள்ளூர் மாவட்டத்தில் 33 மையங்களில் இலவச எச்ஐவி பரிசோதனை

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் 33 நம்பிக்கை மையங்களில் எச்ஐவி பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், 33-வது உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தெரிவித்ததாவது: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் இயங்கும் 33 நம்பிக்கை மையங்களில்எச்ஐவி பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT