குமராட்சியில் 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. 
Regional01

கற்போம் எழுதுவோம் இயக்கம் தொடக்கம்

செய்திப்பிரிவு

குமராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ‘கற்போம் எழுதுவோம்' இயக்கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது.

வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், ஜெயக்குமார் ஜான்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். குமராட்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்வாணன் கலந்து கொண்டு ‘கற்போம் எழுதுவோம்' இயக்கத்தை தொடங்கி வைத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.

SCROLL FOR NEXT