Regional02

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 380 பாமகவினர் கைது

செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்துநேற்று சென்னையில் போராட்டம்நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு கடலூர் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து புறப்பட்ட கட்சி நிர்வாகி கள் 250 பேரை போலீஸார் கைதுசெய்தனர். திண்டிவனம் அருகேசெஞ்சி புறவழிச்சாலை, மேல் பேட்டை, கூட்டேரிப்பட்டு அருகே வாகனங்களில் வந்த பாமகவினர் 130 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT