Regional01

மல்லிகை விலை மீண்டும் குறைந்தது

செய்திப்பிரிவு

கடந்த சில வாரமாக ஒரளவு விலை உயர்ந்திருந்த மதுரை மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ.600-க்கும் கீழ் விற்றது.

கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரை பூக்களுக்கு வரவேற்பு இல்லை. தீபாவளியன்று கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்றது. அதன் பிறகும் விலை குறையவில்லை. கடந்த ஒரு வாரமாக மதுரையில் அடை மழை பெய்தும் பூக்கள் விலை குறையவில்லை. ஆனால், நேற்று முதல் திடீரெனப் பூக்கள் விலை குறைந்து வருகிறது.

மல்லிகை கிலோ ரூ.600, அரளி ரூ.2,550, பிச்சிப்பூ ரூ.500, முல்லை ரூ.500, சம்பங்கி ரூ.80, செவ்வந்ததி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.120, பட்ரோஸ் ரூ.100 எனப் பூக்கள் விலை குறைந்தது.

முகூர்த்தம் மற்றும் கிறிஸ்து மஸ் வரும் வரை பூக்கள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT