Regional02

பாஜகவினரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் வைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரைத் தாக்க முயன்றதையும், ஜீப்பை பாஜகவினர் காலால் எட்டி உதைத் ததைக் கண்டித்தும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலச் செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் சோமசுந்தர், பொருளாளர் விஜி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT