கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக சேலம் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த சூழல் சுற்றுலா தலங்கள் இன்று (2-ம் தேதி) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
ஏற்காடு வனச்சரகத்தில் சேர்வராயன் மலையில் உள்ள கரடியூர் காட்சிமுனைப் பகுதி, ஏற்காடு சூழல் பூங்கா, ஆத்தூர் வனச்சரகத்தில் ஆனைவாரி முட்டல் அருவி ஆகியவற்றில் இன்று முதல் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு வழிமுறைகளுடன் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.