Regional01

வங்கியில் பணம் திருடிய பெண் கைது

செய்திப்பிரிவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு காசாளராக பணிபுரியும் கல்லுக்குழியைச் சேர்ந்த சுதா என்பவர் கடந்த 10-ம் தேதி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.74 ஆயிரத்தை மேஜைக்குள் வைத்துவிட்டு, மதிய உணவு சாப்பிட்டு வந்து பார்த்தபோது மேஜைக்குள் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் சார்பில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் போலீஸார் வங்கிக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சுதா சாப்பிடச் சென்ற சமயத்தில் எடமலைப்பட்டி புதூர் சுந்தரவள்ளி கார்டன் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் மனைவி செல்வி(42) மேஜையைத் திறந்து ரூ.74 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, ரூ.55,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT