நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
தேசிய நல்லாசிரியர் செல்லப்பா தலைமை வகித்தார். வழக்கறிஞர் எஸ்.முத்துப்பாண்டி வரவேற்றார். அமைப்பின் செயலாளர் ஆர்.ஆபிரகாம் டேனியல், அகஸ்தியர் சன் மார்க்க சங்கத்தைச் சேர்ந்த மகாராஜன் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. வழக்கறிஞர் ஆர்.பாரதிமுருகன் நன்றி கூறினார்.