Regional01

சேலத்தில் கலந்தாய்வு மூலம் 210 போலீஸார் இடம் மாற்றம்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்ட காவல் துறையில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவலர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 210 பேர் கலந்தாய்வு மூலம் இடம் மாறுதல் பெற்றனர்.

சேலம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பணியிட கலந்தாய்வு கூட்டத்துக்கு, எஸ்பி தீபா காணிகர் தலைமை வகித்தார். கூடுதல் கண் காணிப்பாளர்கள் அன்பு, பாஸ்கர் மற்றும் டிஎஸ்பி-க்கள் முன்னிலை வகித்தனர்.

இதில், பணியிடம் மாறுதல் கோரி வந்திருந்த போலீஸாருக்கு காவல் நிலையங்களில் உள்ள காலியிடங்கள் டிஜிட்டல் திரையில் விளக்கப்படமாக காண்பிக்கப்பட்டது. போலீஸார் தாங்கள் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்களை தேர்வு செய்தனர். இதில், 210 பேர் இடமாறுதல் பெற்றனர்.

அடுத்த கட்டமாக மது விலக்கு அமல் பிரிவு போலீஸார், எஸ்ஐ-க்களுக்கு அடுத்தடுத்து பணியிடம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT