இதைத் தொடர்ந்து விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து சகாயம் விடுவிக்கப்பட்டார். அதேநேரம் அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சகாயத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களின் உதவி நீதிமன்ற விசாரணைக்கு தேவைப்படும், என உத்தரவிட்டுள்ளனர்.