அப்போது அங்கு வந்த போலீஸார் அய்யனாரை மட்டும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் அங்கு மயங்கி விழுந்தார். அவரது பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சந்தேக மரணம் என டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அய்யனாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், ‘‘அய்யனார் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து முறையாக விசாரிக்குமாறு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதில் பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.