Regional01

வடமதுரை அருகே ஆட்டோ கவிழ்ந்து தம்பதி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வடமதுரை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

வடமதுரை அருகே சித்து வார்பட்டியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பால்ராஜ்(42), இவரது மனைவி சண்முகப்பிரியா(37). இருவரும் தங்களுக்குச் சொந்தமான சரக்கு ஆட்டோவில் நேற்று மாலை திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பால்ராஜ் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

திண்டுக்கல்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காலிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது நிலை தடுமாறிய சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

SCROLL FOR NEXT