வளர்மதி தனது கணவர் அருண் மற்றும் மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். 
Regional01

மதுரையில் இரு மகள்களுடன் தாய் தற்கொலை வீட்டில் வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்த பரிதாபம்

செய்திப்பிரிவு

மதுரை அருகே தாய், இரு மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மேலும் வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கும் விஷம் கொடுத்து கொலை செய் தனர்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மலைச்சாமிபுரத்தில் வசித்து வந்தவர் அருண்(45). இவர் கட்டிட ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வளர்மதி(39). இவர்களுக்கு அகிலா(20), பிரீத்தி(17) ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.

அருண் சொந்த ஊர் திருச்சி. ஒத்தக்கடையில் வளர்மதியின் சகோதரி வீடு உள்ளது. அந்த வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். அருண் உடல்நலக் குறைவால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். மகள்களுடன் வளர் மதி வசித்து வந்தார். கண வர் இறந்ததால் வளர்மதி மன விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், இவரது வீடு நேற்று காலை நீண்ட நேரமாகத் திறக்காமல் இருந்தது. சந்தேகம் அடைந்த வளர்மதியின் உறவினர் ஒருவர் வந்து, கதவைத் திறந்து பார்த்தபோது தாய், இரு மகள்கள் தனித்தனியே தூக்கிட்டுத் தற் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் வளர்த்த நாய் ஒன்றும் வீட்டுக்குள் இறந்து கிடந் தது.

குடும்பத்தோடு தற்கொலை முடிவை எடுத்த வளர்மதி, வளர்த்த நாயை மட்டும் அனா தையாக்க விருப்பமின்றி அதற் கும் விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.

ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பார்த்திபன் உட்பட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூன்று உடல்களையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட அகிலா, பிரீத்தி ஆகியோரது இடது கைகளில் வெட்டுக் காயம் காணப்படுகிறது.

இந்நிலையில் போலீஸார் வீட்டில் நடத்திய சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில், ‘‘எனது நகை, பணத்தை என் அம்மாவிடம் கொடுக்க வேண்டும். எனது கணவர் வீட்டாரிடம் தரக் கூடாது. கணவர் இன்றி வாழப் பிடிக்கவில்லை’’ என வளர்மதி எழுதியுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT