கரோனா தொற்று பரவல் காலத் தில் செவிலியப் பட்டயம், பட்டம், முதுகலை பட்டப்படிப்பு முடித்த வர்கள் தற்காலிகப் பணியாளர் களாக நியமிக்கப்பட்டனர். 3 மாதம் முதல் 6 மாதம் வரை மட்டுமே பணி என்ற காலவரையறையுடன் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
தற்போது தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இவர்கள் பணி விடுவிப்பு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்க ளுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கோரி, தேனி பங்களாமேட்டில் தற்காலிக செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் கவின்ராஜ் தலைமை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் பிரேம்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலையை நம்பி தனியார் மருத்துவமனைவேலையை விட்டு விட்டோம். அவசரகாலத் தொற்றிலும் எங்கள் உயிரைப் பொருட்படுத்தாது பணிபுரிந்தோம். எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.