Regional02

கல்லூரியில் இணையவழி கருத்தரங்கு

செய்திப்பிரிவு

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் இணையவழி கருத் தரங்கம் நடைபெற்றது. தொழில்துறையில் கணினி பயன்பாடு என்ற தலைப்பில் நடந்த இக்கருத்தரங்கில் துறைத் தலைவர் ஆர்.உமா வரவேற்றார். கல்லூரி முதல்வர் எஸ்.சித்ரா சிறப்புரை யாற்றினார். மூத்த பயிற்சியாளர் டி.காமாட்சிதேவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சி மற்றும் சி பிளஸ் பிளஸ் கணினிமொழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அள வில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் என்.அம்பிகாதேவி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT